Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 2020 தேர்தலின் பின்பும் தேசிய அரசே அமையும்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

2020 தேர்தலின் பின்பும் தேசிய அரசே அமையும்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

2020 இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்தும் தேசிய அரசே அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய அரசை நிராகரிக்கும் அளவுக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாம் வெற்றிகரமான மே தினக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். எமது அரசியல் பலம் அதிகரித்துள்ளதை நாம் உணர்கின்றோம். எமது அடுத்த நகர்வுக்கு அது உந்து சக்தியாக அமைந்துள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அமைத்த இந்த நல்லாட்சி தொடர்வதன் மூலம்தான் நாட்டைப் பூரணமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

இதன் காரணமாக 2020இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்தும் தேசிய அரசே அமைக்கப்படும்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு உண்டு. இதனால் மீண்டும் தேசிய அரசை அமைப்பது சாத்தியமாகும்” – என்று கூறியுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …