தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல்
கடந்த 1997ம் ஆண்டு மின்சார கனவு படத்தில் நடித்தார் பாலிவுட் நடிகை கஜோல். அவரது நடிப்பு, ஸ்டைலான நடனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்காமல் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தினார். பிறகு நடிகர் அஜய் தேவ்கனை மணந்தவர் இந்தியிலும் நடிப்புக்கு முழுக்கு போட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் வற்புறுத்தலை ஏற்று கடந்த 2015ம் ஆண்டு தில்வாலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழில் தனுஷ் நடித்த வேலையில்லா s 2ம் பாகம் இயக்கும் பொறுப்பை ஏற்றார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. இதில் ெதாழில் அதிபர் வேடமொன்றில் நடிக்க கஜோல் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே கஜோலும் சவுந்தர்யாவும் நண்பர்கள். அந்த வகையில் கஜோலை அணுகி படத்தில் நடிக்க கேட்டார்.
நட்புக்காக தனது பாலிசியை மாற்றிக்கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டார் கஜோல். சென்னைக்கு புறப்பட்டு வந்தார். 2 வாரம் தங்கி இருந்து தனது காட்சிகளை முடித்துக் கொடுத்தார். கட்டிட தொழில் அதிபர்களான தனுஷும் கஜோலும் சவால்விட்டு மோதிக் கொள்ளும் எதிரும் புதிருமான காட்சிகள் படமாக்கப்பட்டன. காட்சிகளை முழுமையாக முடித்துக் கொடுத்த கஜோல் மீண்டும் மும்பை புறப்பட்டு சென்றார்.




