ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்.!
தலிபான் தலைவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசிய சில மணி நேரங்களில், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிசார் 20 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும், போரை முடிவுக்கு கொண்டுவர சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் கத்தாரில் கையெழுத்தானது.
இதையொட்டி தலிபான் தலைவருடன் நடந்த தொலைபேசி உரையாடல், நல்லபடியாக அமைந்ததாக டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் சாஹீப் மற்றும் உருஜ்கான் பகுதிகளில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதே சமயம் இந்த தாக்குதலின் போது தற்காப்பிற்காக தங்கள் தரப்பிலும், பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.