Sunday , August 24 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

கேரள மாநிலத்தின் தலச்சேரி அருகே இருக்கும் ஜெகன்நாத் கோயில் ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவின் தலச்சேரி ஜெகன்நாத் ரெயில் நிலையம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலச்சேரி போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ரெயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள் தண்டவாளத்தின் அருகே புதிரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சில நாட்களுக்கு இப்பகுதியில் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 2 ஆம் தேதி இதே பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இந்நிலையில் இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்டெடுக்கப்பட்ட 13 வெடிகுண்டுகளையும் தலச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக தலச்சேரி காவல் நிலைய துணை ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தின் போபால்-உஜ்ஜைன் இடையே சென்று கொண்டிருந்த ரெயிலில் இன்று காலை வெடிகுண்டு வெடித்ததில், ரெயிலில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …