இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலைக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தெரிவு குழுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அது சட்டரீதியான தெரிவு குழுவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த குழு நிகழ்ச்சி நிரலுக்கமைய தெரிவு செயற்படுவதாகவும், ஒரு நபரின் தேவைக்கு ஏற்ப அதனை மாற்ற முடியாதென அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் பாதுகாப்பு வழங்காமையினால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டது. அதனை ஏற்கும் பொறுப்பில் இருந்து ஜனாதிபதி தப்பிக்க முடியாது. நாட்டின் அனைத்து தரப்பினரும் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அப்படி அகற்றப்பட்டுள்ளதாக எவராது கூறுவராயின் அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.