ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலம் மியாபூரை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின், இவர் மகள் சாந்தினி(17) 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நண்பர்களை சந்திக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் சாந்தினியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மடினகுடா வனப்பகுதியில் இருக்கும் மலை அடிவாரத்தில் சாந்தினியின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் சாந்தினியின் உடலை காண வீட்டிற்கு வந்த நண்பன் சாய் கிரணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தினி சாய் கிரணை சந்திப்பதற்காகவே சனிக்கிழமை சென்றது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, சாய் கிரண் மற்றும் சந்தினி ஆகிய இருவரும் ஒரே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கியதும் தெரியவந்தது. பின்னர், சாய் கிரணை போலீசார் பிடித்து விசாரித்ததில் சாந்தினியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் சாந்தினியை காதலித்து வந்த சாய் கிரண் திடீரென அவரை விட்டு விலகிய நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள சாந்தினி வற்புறுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாந்தினியை அடித்த சாய்கிரண், பின்னர் மலையிலிருந்து அவரை கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=O2RisPNMC5o