தாஜ்மஹால் குறித்த உண்மையை அறியும் பொருட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அய்யங்கார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
பிரபல வரலாற்றாசிரியர் பி.என்.ஓக் மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் சக்ஸ்னா ஆகியோரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தாஜ்மஹால் உண்மையிலேயே ஷாஜகான் தன் மனைவிக்கு கட்டிய கல்லறைதானா? அல்லது ரஜபுத்திர மன்னர் முகலாய சாம்ராஜ்யத்திற்கு பரிசாக அளித்த சிவன் கோவிலா? என கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.
தாஜ்மகால் குறித்த உண்மைகளை அறிந்து கொள்ள தாஜ்மஹாலில் உள்ள அனைத்து அறைகளின் வடிவமைப்பையும் ஆராய வேண்டும்.அதற்கு மூடப்பட்டுள்ள அறைகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதனை ஆய்வு செய்த மத்திய தகவல் ஆணையம், அதனை மத்திய கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைத்து, இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.