எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது – சபாநாயகர் வி.பி.தனபால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அவை சரியாக 1 மணிக்கு மீண்டும் கூடியது. அவை கூடியபோது பேசிய சபாநாயகர் வி.பி.தனபால், “எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது. சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும்” என்றார். அவையில் மீண்டும் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையின் பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார். முன்னதாக, …
Read More »ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் கடும் ரகளை
ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் கடும் ரகளை ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் மைக், இருக்கைகளை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். கடும் அமளி காரணமாக அவையை 1 மணி வரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். நம்பிக்கை …
Read More »விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம்
விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்விதமாக ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதனூடாக வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கான பேச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமது கட்சி ஈடுபட்டுவரும் நிலையில், நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட,கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். …
Read More »அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் பின்னடைவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் பின்னடைவு தேசிய ஆலோசகராக தான் தேர்வு செய்தவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்ததன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அவரது தேசிய ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் நீக்கப்பட்டார். ரஷ்ய தூதருடன் நடந்த உரையாடல் தொடர்பாக, துணை அதிபர் மைக் பென்ஸை அவர் …
Read More »சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல்
சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி வலியுறுத்தல் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கு கோரும் நடைமுறையை ரகசியமாக நடத்த சபாநாயகர் தனபாலிடம் ஓபிஎஸ் அணி நேரில் வலியுறுத்தியுள்ளது. சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் நேரில் வலியுறுத்தினர். முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நாளை …
Read More »அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கி விட்டதாக ஓ.பி.எஸ் அணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார். …
Read More »யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா
யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாரேனும் ஒரு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பொறுப்புக்கூறலை விட தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக சரிசனை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிடடுள்ளார். அத்தோடு, தேசிய நல்லிணக்கத்திற்கான கொள்கையும் புதிய அரசியலமைப்புமே தற்போது …
Read More »ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி
ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் …
Read More »செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு
செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு நீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பம் முடியும் நிகழ்வாக, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க இருக்கின்றனர். …
Read More »அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை – மைத்திரி
அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை நீதித்துறைக்குரிய நியமனங்களை மேற்கொள்ளும்போது தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட விருப்பத்தக்கமைய தீர்மானமெதுவும் எடுக்கவில்லை என ஜனாதிபதி அதிகாரத்தை தாரை வார்த்தவன் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2017 தேசிய சட்ட சம்மேளனத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களாலும் சில நீதித்துறை நிறுவனங்களாலும் …
Read More »