Monday , June 17 2024
Home / Tag Archives: tamil news paper (page 10)

Tag Archives: tamil news paper

தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம்

கேப்பாபிலவு மக்களின் போராட்டம்

தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து, கிராமசேவகர், அழைத்தபோதும் …

Read More »

தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

தலைமை செயலகத்தில்

தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமை செயலகத்தில், இன்று மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பகல், 12 மணிக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமை செயலகம் வர உள்ளார். இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். …

Read More »

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்

வட கொரியாவின் ஏவுகணை சோதனை

வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவையை அவசரமாக கூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது. டிரம்ப் அதிபரான பிறகு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: இந்த ஏவுகணை …

Read More »

திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

திரையிசை

திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது அமெரிக்காவின் திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னால், நடைபெறும் கடைசி முக்கிய விருது வழங்கும் நிகழ்வான பிரிட்டன் அக்காடெமி விருதுகளில், சிறந்த இயக்குநர் டாமியன் சாஸெல்லி மற்றும் சிறந்த நடிகை இம்மா ஸ்டோன் …

Read More »

அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக

அரசுக்கு மஹிந்த அழுத்தம்

அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக உள்ளுராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை, கால்டன் வீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் பிற்போடப்படுவதன் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்கள் தற்போது செயலற்று போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி …

Read More »

பொறுப்புக் கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குகிறது – இரா.சம்பந்தன்

ஸ்ரீலங்கா அரசாங்கம்

பொறுப்புக் கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குகிறது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ஐ.நா மனித …

Read More »

ஐ.நாவிடம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்

ஸ்ரீலங்கா அரசாங்கம்

ஐ.நாவிடம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது. இந்த நிலையில், கால அவகாசத்தைக் கோருவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கும் முகமாக …

Read More »

எழுக தமிழ் பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம்

எழுக தமிழ் பேரணி

“எழுக தமிழ்” பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்தப் பேரணி, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்கட்சி கொழும்பில் பேரணி நடத்தினால் வடக்கு கிழக்கில் எந்தவொருவரும் பேரணியை நடத்துவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எழுக தமிழ் பேரணி …

Read More »

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு

அமெரிக்கா, சீனா

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி ஒரு நாளே ஆன நிலையில், தென் சீனக் கடற்பரப்பில் இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். …

Read More »

வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம்

பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி

வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம் வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். வங்காளதேசத்தில் பரித்பூர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஒரு பஸ்சும், வேனும் சென்று கொண்டிருந்தது. டாக்கா- குல்னா நகரம் இடையே சென்று கொண்டிருந்த போது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக் …

Read More »