Thursday , June 13 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி

ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி

ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி

ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே லாரியை கொண்டு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியாத் பிரிவு மக்கள் அதிகம் வாழும் சத்ர் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத் நகரில் இந்த வருடத்தில் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் இது ஆகும். கடைகள் நிறைந்த மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ் அமைப்பினர் பாக்தாத் நகரில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …