Thursday , March 28 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு

அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி ஒரு நாளே ஆன நிலையில், தென் சீனக் கடற்பரப்பில் இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென் சீன கடற்பரப்பிற்கு மேலே தன்னுடைய ராணுவ விமானம் பறந்தபோது, சீன கண்காணிப்பு விமானம் 300 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஸ்கார்போரஃப் ஷோல் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பவளப்பாறை தீவு அருகில் நிகழ்ந்த இந்த சம்பவம் பாதுகாப்பற்ற ஒன்றாக இருந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய விமானி பொறுப்புணர்வுடன், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டிருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஏற்கனவே, தென்சீனக் கடற்பரப்பில் சீனா செயற்கைத் தீவுகளை அமைத்து ராணுவ கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. தற்போது, அமெரிக்க ராணுவ விமானத்தை, சீன விமானம் பின் தொடர்ந்துள்ள சம்பவம் தென்சீனக் கடற்பரப்பில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …