அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் […]





