Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் மீட்பு

ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் மீட்பு

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலென கெடுமவத்த பகுதியில் 7 வெற்று தோட்டாக்களை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்
கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று காலை கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்ஸிற்காக நின்றுக்கொண்டிருந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொலித்தீன் பையை பார்க்கும் பொழுது அதில் தோட்டாக்கள் இருந்ததை கண்டு உடனடியாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் குறித்த ரீ56 ரக வெற்று தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

இச்சமபவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …