யாழ் தாவடியில் வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு!
யாழ்.தாவடி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்டு பொலிஸாா் நடாத்திய சோதனை நடவடிக்கையில் இரு வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ரவுடிகள் வாள்களுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாா் வீடொன்றை இன்று அதிகாலை முற்றுகையிட்டுள்ளனா்.
இதன்போது வீட்டின் முன் முகப்புபகுதியில் இருந்து இரண்டு கூரிய வாள்களை மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.