Sunday , December 22 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ​தமிழகத்தில் டெங்குவை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல்..!

​தமிழகத்தில் டெங்குவை தொடர்ந்து பன்றிக் காய்ச்சல்..!

டெங்கு காய்ச்சலை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்தில் பன்றிக் காய்சலுக்கு ஒருவர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சின்ன தாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவர் அங்குள்ள தனியார் ஆலையில் எலட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

கடந்த 2 வாரமாக தொடர் காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையால் முனிராஜ் அவதியுற்று வந்தார். இதனையடுத்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் காய்ச்சல் குணமாகாததை தொடர்ந்து மீண்டும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டது.

இதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே முனிராஜ் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு ஏராளமானவர்கள் மரணமடைந்து வரும் நிலையில் தற்போது பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading…


Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv