ஐக்கிய நாடுகள் சபை 2 வருட கால அவகாசத்தைக் கொடுத்திருப்பது, ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கமாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்குவதன் ஊடாக தமிழரசுக் கட்சி எதனைச் சாதிக்கப் போகின்றது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஜெனீவா அமர்வு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன்,
சர்வதேச சட்டத்தரணிகளை அழைத்து வருவதற்கு தமிழரசுக் கட்சியினால் முடியுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இவ்வாறான விடயங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.