Friday , January 31 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இடைக்கால அறிக்கை குறித்து வவுனியாவில் ஆய்வுக் கூட்டம்! – ஒக்டோபர் 8ஆம் திகதி நடக்கும்

இடைக்கால அறிக்கை குறித்து வவுனியாவில் ஆய்வுக் கூட்டம்! – ஒக்டோபர் 8ஆம் திகதி நடக்கும்

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்குச் சாதகமான எத்தகைய விடயங்களை மேலும் சேர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவுனியாவில் பொதுக் கூட்டத்தை நடத்த ரெலோவின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு நேற்றுக் கூடியது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கை என்பவற்றில் உள்ள சாதக பாதக விடயங்களை நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஊடாக ஆராயத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் எதிர்வரும் 8ஆம் திகதி இடதற்கான பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அந்தக் கூட்டத்தில், புதிய அரசமைப்பில் தமிழர் நலன்சார்ந்து மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களை அடையாளம் கண்டு அதனை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …