பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சுஜா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதை அவராலேயே நம்ப முடியவில்லை.
தனக்கு எப்படி மக்கள் வாக்களிக்காமல் போனார்கள் என அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சினேகன் தனக்கு அவரது மதிப்பெண்களை கொடுத்து காப்பாற்றுவார் என எதிர்பார்த்தார்.
அதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே ஒரு முறை நடந்தது போல வெளியேற்றி விட்டு மீண்டும் உள் அழைப்பார்கள் என நினைத்து கொண்டார். அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே தான் வெளியேற்றபட்டதை தன்னால் ஏற்று கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். எனவே 100 நாள் வரை பிக்பாஸ் வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என கூறி வருகிறார்.
100 நாள் வரை தனக்கு பிக்பாஸ் வீட்டிலேயே தனக்கு ஒரு அறையை ஒதுக்கி தருமாறு கேட்டு பிடிவாதம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை நேற்று கமலிடம் கூட சொல்லி இருந்தார். சுஜா வெளியேற மாட்டேன் என கூறி அடம்பிடித்து வருவதால் என்ன செய்வது என தெரியாமல் விஜய் டிவி தரப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw