Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையை தாக்கிய புயல்

இலங்கையை தாக்கிய புயல்

இலங்கையில் புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 4 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது புயலாக மாறி இன்று இலங்கையை தாக்கியது. இதனால், இலங்கை முழுவதும் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்து வருகிறது.

அப்போது ஏற்பட்ட விபத்துகளில் 4 பேர் பலியாகியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும், நான்கு படகுகளில் மீன்பிடிக்க சென்ற 13 பேர் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. எனவே, அவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மீனவர்களோடு சேர்த்து மொத்தம் 23 பேரை காணவில்லை என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …