Saturday , August 23 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / நடைபாதையில் வாழ்பவர்களின் நிலை என்ன?

நடைபாதையில் வாழ்பவர்களின் நிலை என்ன?

இந்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் இதுவரை 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்வி ஒன்று தற்போது எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீடுகளின்றி நடைபாதைகளில் வசித்து வருபவர்களுக்கு அரசின் சார்பில் காப்பகங்கள் அமைத்து தர வேண்டும் என்று வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இது குறித்து விவாதிக்கும் போது, முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத நடைபாதை வாசிகளின் நிலை என்ன? இந்திய அரசின் பார்வையில் அவர்கள் இல்லாத நபர்களா? என கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
மேலும், இதற்கான பதிலை இவ்வழக்கின் மறுவிசாரணையின் போது வழங்க வேண்டும் என்றும் மறுவிசாரணை மூன்று வாரங்களுக்கு பின்னர் நடக்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …