Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உள்ளூராட்சித் தேர்தலால் அரசுக்குப் புதிய தலையிடி!

உள்ளூராட்சித் தேர்தலால் அரசுக்குப் புதிய தலையிடி!

2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதால் உள்ளூராட்சி சபைகளை மறுசீரமைக்கவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு அவை கலைக்கப்படும்போது 4,486 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர். ஆனால், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் தற்போது 6 ஆயிரத்து 619 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் கட்டட வசதி முதல் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் சிக்கல்நிலை தோன்றியுள்ளது.
விரைவில் புதிதாக அமைக்கப்படவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டடங்களை அமைக்கவும், நிர்வாக வசதிகளை மேற்கொள்ள சிக்கல் நிலை தோன்றியுள்ள உள்ளூராட்சி சபைகளை மறுசீரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்ளூராட்சி ஆட்சிமுறையில் மேற்கொள்ளப்படவுள்ள வினைத்திறன்களால் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அதிகமான கரிசனை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசுக்கு இந்த விடயங்கள் புதிய தலைவலியாக உள்ளது எனவும் அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …