இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டு, 195.78 ரூபாயைத் தொட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகராக 200 ரூபாயைத் தாண்டி வீழ்ச்சி கண்டது.
இந்த நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி இந்த வாரம் 2.3 சதவீத ஏற்றத்தைக் கண்டுள்ளது.