பொறுப்புக்கூறல் விவகாரம்: ஐ.நா.விடம் கால அவகாசம் கோரும் இலங்கை
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா.வில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நடைமுறைப்படுத்தாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்விடயம் குறித்து மேலும் ஒன்றரை வருட கால அவகாசத்தை கோருவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோரியுள்ளதாகவும், சிவில் அமைப்புகளும் அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எவ்வாறெனினும், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை தாமதமின்றி நிறுவ வேண்டுமெனவும் சிவில் சமூக அமைப்பினர் வலியுறுத்தியுள்ளர்.




