Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!

இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னுள் உரு­வா­கி­யுள்ள முரண்­பாட்­டுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கொழும்­பில் நேற்று நடை­பெற இருந்த கூட்­டம் திடீ­ரெ­னக் கைவி­டப்­பட்­டது.

இன்று காலை­யில் அந்­தச் சந்­திப்பு சில­வே­ளை­க­ளில் இடம்­பெ­ற­லாம் என்று தெரி­விக்­கப்­ப­ட்டது.

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த முரண்­பாடு கார­ண­மாக, ரெலோ அமைப்பு தனித்­துப் போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது.

இதன் பின்­னர், எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், ரெலோ கட்­சி­யின் தலை­வர்­க­ளு­டன் அலை­பே­சி­யில் பேசி­ன◌ார்.நேரில் சந்­தித்­துப் பேசு­வ­தற்­கும் அழைப்பு விடுத்­தி­ருந்­தார். அதற்கு அமை­வாக இன்­றைய தினம் சந்­திப்பு நடை­பெ­றும் என்று முன்­னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நேற்­று­முன்­தி­னம் இரவு இந்­தச் சந்­திப்பு திடீ­ரென நேற்று நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் நேற்று இரவு ரெலோ, தமிழ் அர­சுக் கட்சி இடை­யி­லான சந்­திப்பு நடை­பெ­ற­வில்லை. இன்று காலை இந்­தச் சந்­திப்பு சில­ வே­ளை­க­ளில் நடக்­கக் கூடும் என்று தெரி­ விக்­கப்­பட்­டது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …