சஜித்கு விசேட அழைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு பல்வேறு காரணங்களுக்காக விலகியிருப்பவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகியிருக்கும் பலர், நாட்டிற்கு சாதகமான முயற்சிகளில் ஈடுபட தயாராக இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டினார்.
கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் உரையாடலின் மூலம் தீர்க்கப்பட முடியும் என்றும் அந்த கருத்து வேறுபாடுகள் அவர்களை ஒதுக்கி வைப்பதற்கான காரணமல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
எனவே உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாகாண சபைகளில் உள்ள அனைத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் கட்சி செயற்பாட்டாளர்களுடன் கைகோர்த்து, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றிபெற பங்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை ஏற்கனவே பலர் சஜித்தோடு இணைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை பரிந்துரைக்காத நிலையில், அக்கட்சி சார்பாக வேட்பளாராக பரிந்துரைக்கப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் சஜித் பிரேமதாசாவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.