Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / ஓவியாவை காப்பாற்றுவதற்காக நான் இதை செய்தேன்! உண்மையை சொன்ன சினேகன்

ஓவியாவை காப்பாற்றுவதற்காக நான் இதை செய்தேன்! உண்மையை சொன்ன சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் சினேகன். இவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உண்டாகிவிட்டது. கவிஞர், கவிஞர் என பலரும் இவரை அழைக்க அனைவருக்கும் ஆதரவாய் நின்றார்.

ஓவியா, ஆரவ் விசயத்தில் சினேகனும் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். மருத்துவமுத்தம் கான்சப்டில் சினேகன் பெயரும் அடிபட்டது.

ஓவியா மன உளைச்சலில் இருந்த போது சினேகன் மிகுந்த ஆதரவாக இருந்தார் என்பதையும் பார்த்திருப்போம். இது குறித்து அவர் பேசிய போது சூழ்நிலைகள் அவர்களை தடம் மாறவைத்திருக்கிறது.

தடுமாற வைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் இப்போது சரியாகிவிட்டார்கள். தெளிவு அவர்களுக்குள் வந்துவிட்டது. ஓவியா மன வருத்தத்தில் இருந்தபோது நான் பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

சிறு சத்தம் கேட்டால் கூட அவள் என்ன செய்கிறாளோ என அவளின் படுக்கையை எட்டிப்பார்த்திருக்கிறேன். ஏன் அவளுக்காக சமையலறை கத்தியை கூட தூங்கும் முன் ஒளித்துவைத்தேன் என உருக்கத்துடன் கூறினார்.

Loading…

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …