Wednesday , August 27 2025
Home / சினிமா செய்திகள் / எதிரிகளை எப்படி எதிர்கொள்வது: பிக்பாஸ் கன்பெஷன் ரூமில் கதறி அழுத சினேகன்

எதிரிகளை எப்படி எதிர்கொள்வது: பிக்பாஸ் கன்பெஷன் ரூமில் கதறி அழுத சினேகன்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்போட்டி நாளையுடன் முடிவடையவுள்ளதால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் 100-வது நாளை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவு நாட்கள் கடுமையான டாஸ்க்குகளை கொடுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ளதால், போட்டியாளர்களுக்கு பிரியாணி, சிக்கன் என கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதுமட்டுமின்றி சினேகன் வீட்டில் இவ்வளவு நாட்கள் இருந்ததைப் பற்றி கவிதை எழுதினார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து, முதலே போட்டியாளராக உள்ள சினேகன் நாளை வெளியேறப்போவது பற்றி கண்பெஷன் ரூமில் பேசினார்.

அப்போது, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போவதை நினைத்தாலே கவலையாக இருக்கிறது.

வெளியில் இருப்பவர்கள் என்னை எப்படி பார்பார்கள், என் நண்பர்கள், எதிரிகளை நான் எப்படி எதிர்கொள்வது என நினைத்தால் வருத்தமாக உள்ளது என கூறிவிட்டு கதறி அழுதார்.

இதே போன்று மற்ற போட்டியாளர்களான கணேஷ், ஆரவ், ஹரிஷ் கல்யாண் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதைப் பற்றி பேசினர்.

https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …