Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமைச்சு பதவியை நிராகரித்த சிவாஜிலிங்கம்

அமைச்சு பதவியை நிராகரித்த சிவாஜிலிங்கம்

வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை அழைத்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்க முடியுமா என கேட்டிருந்தார். ஆனால் அந்த கோரிக்கைக்கு நான் நிராகரித்துள்ளேன்.

நான் அமைச்சு பதவியை ஏற்பது மற்றவர்களுக்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காகத்தான் அமைச்சு பொறுப்புக்களை நிராகரித்தேன்.முதலமைச்சர் கேட்டதில் தவறில்லை. ஆனால் அவருக்கு தெளிவாக கூறியுள்ளேன்.

முதலமைச்சர் என்னிடம் கூறும் போது நீங்கள் நாடாளுமன்றத்திலும் வல்வெட்டிதுறை நகரசபை தலைவராகவும் இருந்துள்ளீர்கள், ஆகவே அமைச்சு பொறுப்பு ஒன்றை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்றே கேட்டார். ஆனால் நான் அதனை ஏற்க மறுத்தேன்.

மேலும் இங்குள்ளவர்களை விட தென்னிலங்கை ஊடகங்கள் தினம் கேட்கிறார்கள். அவர்கள் பயப்படுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.ஒருவேளை சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சு பதவி கிடைத்தில் பலம் கூடிவிடும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …