மெர்சல் படத்தின் மீது ப ஜ க வினர் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் வேடிக்கையாகவே இருந்து வருகிறது. இதை தொடர்ந்து எச்.ராஜா, விஜயின் மதத்தை குறிப்பிட்டு ஜோசப் விஜய் என்று விமர்சித்தது மட்டுமில்லாமல் அவரது அடையாள அட்டையையும் சமூக வலைத்தளத்தில் அனுமதியின்றி வெளியிட்டுள்ளார்.
இதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்தும் எச்.ராஜாவிற்கு எதிராக பல விமர்சனங்கள் வந்து குவிகின்றன.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூகவலைதளத்தில் பகிர்வது சட்டரீதியானதா?
நாளை ஏதாவது உண்மையை நிரூபிப்பதற்காக ஆதார் அட்டையை விபரங்களை வெளியிடுவார்களா” என சின்மயி கேள்வியால் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.