நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யோசனை கூறியுள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ரயில்வே கட்டணங்கள் போல் மின் கட்டணங்களும் நாடெங்கும் ஒரே சீராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பீகாரில் அனைத்து பகுதிகளுக்கும் அடுத்தாண்டு இறுதிக்குள் மின்சார வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.