Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடமேல் மாகாண சபையிலும் பிரளயம் ஏற்படும் அறிகுறி! – பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணிக்குத் தாவ முயற்சி

வடமேல் மாகாண சபையிலும் பிரளயம் ஏற்படும் அறிகுறி! – பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணிக்குத் தாவ முயற்சி

வடமேல் மாகாண சபையிலும் ஆட்சி மாற்றமொன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன எனவும், அச்சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியின் பக்கம் சாயவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அச்சபையின் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சராகவிருந்த டி.பி.ஹேரத் பண்டாவின் பதவி பறிக்கப்பட்டு லக்ஷ்மன் வெண்டருவவுக்கு வழங்கப்பட்டது. அன்றுமுதல் சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி இன்று உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றது எனவும், ஹேரத் பண்டாரவின் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

தற்போதைய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், விவேகமற்ற அதிரடி மாற்றங்களாலும் பல மாகாண சபைகள் பெரிதும் குழம்பிப்போயிருப்பதாகத் தெரிவித்த ஹேரத் பண்டா, வெகு விரைவில் வடமேல் மாகாண சபையிலும் மாற்றமொன்று நிகழும் எனவும் எதிர்வுகூறியுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …