Thursday , April 17 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?

பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றுள்ளது. என் தேசம் என சொல்பவர்கள் காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனையின் போது எங்கு போனார்கள். இந்த பிரச்சனை எழும்போது சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். சிஸ்டம் சரியில்லை என கூறுபவர் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv