Sunday , December 22 2024
Home / சினிமா செய்திகள் / சர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம்.! மெர்சல் ரகசியமா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! என்ன தெரியுமா .?

சர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம்.! மெர்சல் ரகசியமா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! என்ன தெரியுமா .?

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் மற்றுமொரு ஸ்வாரசிமான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

கடந்த 21 ஆம் தேதி வெளியான ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல் வாதிகளை எதிர்த்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தன.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்,வரலக்ஷ்மி, விகரம் வேதா பிரேம் போன்ற பல நடிகர் பட்டாளம் நடித்துள்ளது.அதே போல வில்லன் நடிகர் ராதாரவி மற்றும் பழ. கருப்பையா ஆகிய இருவரும் அரசியல்வாதியாக நடித்துள்ளனர் என்று சமீபத்தில் வந்த தகவல்கள் மூலமும் புகைப்படம் மூலமும் புலப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று லுக்கில் வருவதாக இந்த படத்தின் புகைப்பட கலைஞர் குனல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அண்மையில் தெரிவிக்கையில் “இந்த படத்தில் நடிகர் விஜய்யின் மூன்று லுக்கும் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது எனவும் அஜித் ரசிகர்களே என்னிடம் நன்றாக இருப்பதாக கூறினார்கள்,” என்று தெரிவித்துள்ளார் . இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv