நாடு கடந்த தமிழீழ அரசு – மஹிந்த அணி இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர்!
மஹிந்த அணியின் குழுவினருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஜெனிவாவில் கடும் மோதல் இடம்பெற்றது.
இந்த மோதல் காரணமாக, சரத் வீரசேகர ஏற்பாடு செய்திருந்த பக்க நிகழ்வு இறுதியில் அவராலேயே கலைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றச்சாட்டு ஆதாரங்களுடன், மஹிந்த அணியினர் ஜெனிவாவை களமிறங்கியுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குகின்றார்.
மஹிந்த அணியால் ஒழுங்கமைக்கப்பட்ட பக்க நிகழ்வு ஜெனிவாவில் நேற்று நடைபெறவிருந்தது. இதற்கு முன்னதாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி மணிவண்ணன், சரத் வீரசேகர போர்க்குற்றவாளி என்றும், அவரை சுவிஸ் அரசு கைது செய்ய வேண்டும் என்றும் கோரினார். இதனால் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவுடன் அவருக்கு மோதல் உருவானது.
இந்த மோதல் காரணமாக, சரத் வீரசேகர ஏற்பாடு செய்திருந்த பக்க நிகழ்வு இறுதியில் அவராலேயே கைவிடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.