போலியான அனுமதிப் பத்திரத்தைத் தயாரித்து டிப்பர்
வாகத்தில் மணல் கடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறிய லில் வைகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று உத்தரவிட் டது.
முல்லைத்தீவு, புதுக் குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மணல் எற்றிச்சென்ற டிப்பர் வாகனங்கள் மறித்து சோதனையிடப் பட்டன.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிக்கன்ன வின் உடனடி முறிய டிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யசிந்தன் தலமை யிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போதே போலியான அனுமதிப் பத்திரத்தைப் பயன் படுத்தி கைவேலியில் இருந்து வவுனியாவுக்கு டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற சாரதி கைது செய்யப் பட்டார் என பொலி ஸார் தெரிவித்தனர்.
அவர் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக் கைக்காக புதுக்குடி யிருப்புப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக் கப்பட்டிருந்தார். புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் அவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.