தலைவர் பிரபாகரன் குறித்து சம்பிக்க சொன்ன இரகசியம்!
நாடாளுமன்றம் கலைப்பற்கு முன் பொதுக் கூட்டணியை அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையிலான புதிய கூட்டணிக்குள் இரத்தம் தோய்ந்த கறைகளுடன் எவரும் இணையவில்லை என கூறிதுடன் நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னதாக கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இல்லை என்கிற துணிச்சலில் பலர் இன்று நாட்டைப் பிரிக்கின்ற சக்திகள் என்றும் , அவர்கள் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.