Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம்

சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம்

சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம்

“போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசு கூறிக் கொண்டிருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டவற்றை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையைப் – பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை அமைக்க மாட்டோம் என்று இலங்கை அரச தலைவர்கள் குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை அரசு சொல்வதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிக்கின்ற நிலையில், இலங்கை அரசின் அமைச்சர்கள் மாறி மாறிக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தமையினால்தான் வவுனியாவில் நாம் கடந்த வாரம் அவசர கூட்டத்தை நடத்தினோம். அதில் நாம் எடுத்த முடிவில் மாற்றமில்லை.

2015 ஆம் ஆண்டு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கும் – வழி நடத்துவதற்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மை – பெறுபேறு கிடைக்கப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்க வேண்டும். எமது இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இது எமது உறுதியான முடிவு” – என்றார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …