Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

புதிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இளைஞர்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக நாட்டை பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குறிப்பிடும் சம்பந்தன் இதற்கு வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதி உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தேசிய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மெக்ஹெய்ஷர் விளையாடடரங்கில் இன்று ஆரம்பமான இளைஞர் முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …