UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்
UNP துணை தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது.
இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்ந்லையில் யு.என்.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களும் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க சஜித் பிரிவு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற சஜித்-ரணில் பேச்சுவார்த்தையின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் UNP வேட்பாளராக இருக்க வேண்டுமென்றால், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற கட்சிகளால் அவர் ஆதரிக்கப்படுவதை நிரூபிக்க வேண்டும் என கூறியிருந்தார்.