இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் !
சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி இதயம் சின்னத்தில் களமிறங்கும் என தெரிகிறது.
இன்று மாலை நடைபெறும் ஐ.தே.கவின் செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணியின் பெயர், சின்னம், பொதுச்செயலாளர் விபரங்களை சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக, கட்சியின் பிரமுகர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டணி விபரங்களை இறுதி செய்துள்ளனர். மங்கள சமரவீர தலைமையிலான“அபே ஜாதிக பெரமுன” மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து சஜித் பிரேமதாச தலைமையில் இதயம் சின்னத்தில் “சமகி ஜன பலவேகய” என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது.
இந்த கூட்டணியை பதிவு செய்ய தேர்தல்கள் செயலகத்தின் இன்றைய தினமே விண்ணப்பத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.