Friday , August 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை!

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை!

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை!

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இந்த அமர்வில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையை இந்த அமர்வில் இன்று வெளியிடவுள்ளார். ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையின் வரைபு கடந்த 3ஆம் திகதி வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் மிகக் காட்டமான கருத்துக்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்திருந்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முன்கூட்டியே வெளியாகியிருந்தாலும், அதில் அவர் முன்வைத்திருந்த பரிந்துரைகள் இலங்கை தொடர்பில் நாளை வியாழக்கிழமை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …