சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.
எவ்வித அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார்.
உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசைன் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினர் வழிபாடுகளில் ஈடுபடும் பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும்.
அதுமாத்திரமின்றி இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் இனங்களுக்கு எதிரான அநீதி செயற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், எவ்விதமான அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.