Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம்

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம்

புதிய ரூ.1000 நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி திட்டம்

புதிய ரூ.1000 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, அவை வங்கிகள், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் வழியாக, திரும்பப் பெறப்பட்டு, ரிசர்வ் வங்கி கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.

அதேசமயம் ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, ஓரளவு சில்லறை தட்டுப்பாட்டையும் மத்திய அரசு சீர்செய்தது. தற்போது, புதிய ரூ.1000 நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன.

இதற்காக, புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூ.1000 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. முழுவீச்சில் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எப்போது வெளியிடப்படும் என உறுதியான தகவல் இல்லை.

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளைப் போன்றே, ரூ.1000 நோட்டுகளும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …