வெள்ளை இனவாத அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கூறி அமெரிக்காவின் வர்த்தகக் குழுக்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள்.
இதனால், அவர் அமைத்திருந்த இரு முக்கிய தொழில் கூட்டமைப்புகளைக் கலைக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை சார்லட்ஸ்வில் நகரில் நடந்த வன்முறைகளுக்கு வெள்ளை இனவாத அமைப்புகள், அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஆகிய இரு தரப்புமே காரணம் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இந்நிலையில், சிஇஓ-க்களின் ராஜினாமாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வர்த்தக குழுக்களை கலைக்கும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.
இந்த வர்த்தகக் குழுக்களின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதை விட அவற்றை நான் கலைக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.