Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் – ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் – ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

”இயற்கை அனர்த்தத்தினால் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் சொத்துக்களையும் இழந்துள்ளனர். அவர்களின் துன்பத்துடன் நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கான நலன்புரி விடயங்களில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

தேசிய அனர்த்தம் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு சேவை, அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் முன்னெடுத்த சேவைகளை நாம் பாராட்ட வேண்டும்,” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …