Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு

கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு

கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு

ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தொடர்புபட்டுள்ளதாகஇ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை நேற்றைய கல்கிஸை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட கீத் நோயார் தொம்பேயில் உள்ள இராணுவ இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.

எனினும், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச அமைப்புகள், இராஜதந்திர தூதரகங்கள் கொடுத்த அழுத்தங்களை அடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேஜர் புலத்வத்த உள்ளிட்ட மூன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைக் கைது செய்தனர்.

இவர்களை கல்கிஸை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கீத் நோயர் தடுத்து வைக்கப்பட்டிருந்த தொம்பே இரகசிய வதைமுகாம் அமைந்திருந்த வீட்டை, மேஜர் புலத்வத்தவே தனது தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வாடகைக்கு அமர்த்தியிருந்தார் என்று கூறினார்கள்.

கீத் நோயாரைக் கடத்திய பின்னர், அதுபற்றி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் அமால் கருணாசேகரவுக்கு மேஜர் புலத்வத்த அறிவித்ததாகவும் அவர், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவுக்கு தெரியப்படுத்தியதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண. கீத் நோயார் கடத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அப்போது பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த கோட்டபாய ராஜபக்சவுக்கு அறிவித்தனர்.

உடனடியாக. மேஜர் புலத்வத்தவுக்கு கையடக்க தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கோட்டபாய ராஜபக்ச சில உத்தரவுகளை வழங்கியதாக நீதிவானிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இதுதொடர்பான முழு விபரங்களையும் சமர்ப்பிப்பதாகவும். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவியில் இருந்த போதே. இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

‘இராணுவம், இராணுவத் தளபதியில் தனிப்பட்ட சொத்து அல்ல’ என்ற தலைப்பில், கீத் நொயார் தி நேசன் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

இதனையடுத்து குறித்த கடத்தல் இடம்பெற்றிருந்தால், சரத் பொன்சேகா மீது இந்தக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளை ஒத்த செயல்கள் குறித்து, சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நீண்ட வாக்குமூலம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழங்கியுள்ளார்.

கோட்டபாய ராஜபக்சவுக்கு தெரிந்தே பல கடத்தல்கள், கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்தும் அவர் விபரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …