எதிரணி வேட்பாளரை தோற்கடிக் கக்கூடிய, பலமிக்க ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க பலர் உள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, சபாநாயகர் கருஜயசூரிய, பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா என பலர் உள்ளனர்.
எதிரணி வேட்பாளரை தோற்கடிக்கக் கூடிய, பலமிக்க ஒருவரையே நாம் வேட் பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளோம்.
அதேநேரம், எமது தரப்பிலிருந்து சிலர் தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சென்று சந்தித் துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர்கள் செல்வதில் தவறில்லை என்பதுவே எமது கருத்தாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எத்தனை பேர் சென்று கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்தார்கள் என தனக்கு தெரியாதென்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
தமக்கு அரசியல்ரீதியாக எதிரிகள் இருந்தாலும், யாரும் தமக்கு தனிப்பட்ட ரீதியாக எதிரிகளாக செயற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவைப்படும் வேட்பாளரை அன்றி, நாட்டுக்கு தேவைப்படும் வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.