Tuesday , June 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்து!

அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்து!

கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில், அதிஷ்டவசமாக அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. விபத்தினை தொடர்ந்து உதவிக்கு விரைந்த மற்றொரு வாகனத்தில் அமைச்சர் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …