Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேசிய தமிழ் மொழி தின விழா யாழ்ப்பாணத்தில்!

தேசிய தமிழ் மொழி தின விழா யாழ்ப்பாணத்தில்!

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழி தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வின் போது, தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.

மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும்¸தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஊர்வலமும் இந்திய கலைஞர்களின் மேடை நிகழ்வுகளும் இந்திய மற்றும் இலங்கை இலக்கிய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது.

குறித்த விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் இராதாகிருஸ்ணன், கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன¸ வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலளார் இரவீந்திரன்¸கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளீதரன்¸மத்திய மாகாண மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …