Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி உயிரிழப்பு!

அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி உயிரிழப்பு!

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை ( எஸ்.டி.எவ்) உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார்.

இவர் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஒரே மகனாவார். இறக்கும்போது இவருக்கு வயது 80 ஆகும்.

எயர் சிலோன் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றிய ரவி ஜெயவர்த்தன, பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார்.

இதன்போதே அவர், 1984ஆம் ஆண்டு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினார்.

ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆரம்ப காலத்திலேயே நசுக்குவதில் மூளையாகச் செயற்பட்டவர்களில் ரவி ஜெயவர்த்தனவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …